கொரோனா நெருக்கடியால் கையேந்தும் நிலையில் மக்கள் – ராஜித சேனாரட்ண

கொரோனா வைரஸ் நெருக்கடியால் நாட்டு மக்கள் கையேந்தும் அளவுக்கு வாழ்வாதாரப் பிரச்னையை எதிர்கொண்டுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

தற்போதைய அரசை அனைவரும் மக்களுக்கான அரசு எனக் கூறுகின்றனர். அவ்வாறாயின் அவர்கள் மக்களுக்கான நிவாரணத்துக்கு அதிகளவு பணத்தை ஒதுக்கியிருக்க வேண்டும். அதற்கு மாறாக இந்த அரசு நாட்டு மக்களுக்கான நிவாரணத் தொகையை குறைத்துள்ளமையையே இந்த பட்ஜெட்டில் காண முடிகின்றது.

நாடு முழுவதும் மக்கள் வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். கொரோனா உயிரிழப்புக்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. 91 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அவ்வாறாயின் எப்படி கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளதாக கூறமுடியும்” என்றார்.