பஸிலுக்கு விதித்த பயணத்தடை நீக்கம்

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாடுகளுக்கான பயணத் தடையை நீக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர்முன் ஆஜராக வேண்டிய உத்தரவை நீக்க அத்திணைக்கள அதிகாரிகளுக்கு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது, திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான நிதியைமுறைகேடாகப் பயன்படுத்தினார் எனக் கூறப்படும் சம்பவத்தில் அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.