அமெரிக்க தடுப்பூசியை விட ஸ்புட்னிக் விலை குறைவு – ரஷ்யா கூறுகின்றது

அமெரிக்காவின் மொடர்னா மற்றும் பைசர் நிறுவனங்களின் தடுப்பூசியைவிட தங்கள் தடுப்பூசியின் விலை குறைவாக இருக்கும் என ரஷ்யாவின் ஸ்புட்னிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்டச் சோதனை பல நாடுகளிலும் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் அவற்றுக்கான விலைகள் குறித்தும் பேசப்பட்டுவருகின்றன.

அமெரிக்காவின் மொடர்னா நிறுவனத் தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை சுமார் ரூபா 1,875 முதல் ரூபா 2,775 வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் பைசர் நிறுவனத் தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை சுமார் ரூபா 1,500 என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்கத் தடுப்பூசிகளை விட ரஷ்யா தயா ரித்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை மிகவும் குறைவாக இருக்கும் என்று அதன் அதிகார பூர்வ இணையத்தளம் கூறியுள்ளது.

மேலும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.