சாவகச்சேரியில் ஆறு இளைஞர்கள் வாளுடன் கைது

சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் 6 இளைஞர்கள் நேற்று வாளுடன் கைது செய்யப்பட்டனர்.

இந்த 6 இளைஞர்களும் பயணித்த வாகனத்தை சோதனை செய்யும்போது வாள் ஒன்று மீட்கப்பட்டது. இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பேரிடமும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் அவர்களை சாவகச்சேரி நீதி மன்றில் ஆஜர்படுத்த நட வடிக்கை மேற் கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.