மாவீரர் தினத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளபோதும் அதனை மீறி அந்த தினத்தை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அனுஷ்டித்துள்ளார். எனவே அவரை நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என பொதுபலசேனா அமைப்பு கோரியுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.