5,000 சிங்களவர்களைக் குடியேற்ற 100 வருடம் பழமையான மரங்களை பசில் வெட்டினார் – ரிஷாத் குற்றச்சாட்டு

2009 ஆம் ஆண்டு மீள் குடிற்ற அமைச்சராக பசில் ராஜபக்ஷ இருந்த போது 5,000 சிங்களவர்களைக் குடியேற்ற 100 வருடங்கள் பழமையான மரங்களை வெட்டி அழித்தார் என ஜனாதிபதி ஆணைக்குழுவில் பாராளு மன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பசில் ராஜபக்ஷவின் நடவடிக்கைக்கு எதிராக யாரும் முறையிடவில்லை என்றும் மாறாக வில்பத்து காடழிப்பு பற்றியே அனைவரும் பேசுகின்றனர் என்றும் அவர் கவலை வெளியிட்டார்.

விளக்கமறியலிலுள்ள ரிஷாத் பதியுதீன், ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று இரண்டாவது நாளாகச் சாட்சியம் வழங்கினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.