தேசியப் பட்டியல் ஆசனம் யாருக்கு? முடிவெடுக்க இன்று கூடுகின்றது ஐ.தே.க.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினரைத் தெரிவு செய்வது குறித்து இன்று இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்க்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்

கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்கள் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அறிந்துக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியின் பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தன செயற்பட்டு வரும் நிலையில், கட்சித் தலைமைத்துவத்துக்கு அவர் தெரிவு செய்யப்படுவதில் எந்த எதிர்ப்பும் இருக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார கூறியுள்ளார்.