கொரோனாவினால் மரணமடைந்ததாக நேற்று அறிவிக்கப்பட்ட நான்கு பேரின் விபரங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் ஒருவர் மட்டுமே நேற்று உயிரிழந்துள்ளார்.

  1. கொழும்பு 15 பகுதியில் வசிக்கும் 30 வயது பெண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவர் நேற்று 21 ஆம் திகதி இறந்துள்ளார். கொவிட் தொற்றுடன் நிமோனியா. மரணத்திற்கு முக்கிய காரணம் என கூறப்பட்டுள்ளது.
  2. கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 53 வயது நபர். கொழும்பு அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இவர் கடந்த 20 ஆம் திகதி இறந்துள்ளார். கொவிட் தொற்றுடன் நாள்பட்ட நுரையீரல் நோய் அதிகரித்தமை மரணத்திற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
  3. பொறளை பகுதியில் வசிக்கும் 84 வயது பெண். வீட்டில் இறந்தார். இந்த மரணம் நேற்று 21 அன்று நிகழ்ந்துள்ளது. மரணத்திற்கான காரண கொவிட் தொற்றுடன் நிமோனியா ஏற்பட்டுள்ளது.
  4. கொழும்பு 10 பகுதியில் வசிக்கும் 75 வயது ஆண். கொவிட் 19 பாதிக்கப்பட்ட நபராக அடையாளம் காணப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (22) உயிரிழந்துள்ளார். கோவிச் 19 நோய்த்தொற்றுடன் நிமோனியா அதிகரித்தது இறப்புக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.