மேல்மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் நாளை ஆரம்பம்

மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் முன்றாம் தவணைக்காக நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள போதும் தனியார் கல்வி நிலையங்களுக்கான அனுமதி இன்னமும் வழங்கப்படவில்லை என யாழ் மாவட்டச் செயலர் கே.மகேசன் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, தேசிய கொரோனா தடுப்புச் செயலணியின் தீர்மானத்துக்கு அமைவாக தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் நாளை திட்டமிட்டபடி அரச மற்றும் தனியார் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுமதிகள் வழங்கப்படவில்லை. தேசிய மட் டத்தில் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அவற்றுக்கான அனுமதி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.