ஐ.தே.க. தேசியப் பட்டியலின் மூலமாக பாராளுமன்றம் செல்ல ரணில் திட்டம்?

தற்போது நிரப்பப்படாமல் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டில் மூலம் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் செல்லத் திட்டமிட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு தம்மை முன்மொழியுமாறு ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை முவைத்திருந்தனர். அது தொடர்பில் அவர் எந்த ஒரு பதிலையும் அவர்களுக்கு வழங்கவில்லை.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவரிடம் வினவியது. இதன்போது கருத்து வெளியிட்ட அந்த உறுப்பினர், தலைவர் இதுவரை தேசியப் பட்டியல் தொடர்பில் எதையுமே அறிவிக்கவில்லை. அதற்கு ஒரு காரணம் உள்ளது.

அந்த தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக அவருக்கு பாராளுமன்றம் செல்லும் எண்ணம் உள்ளது-என்றார் இருப்பினும் தேசியப் பட்டியல் ஊடாக யார் பாராளுமன்றம் செல்வது என்பதைக் கட்சின் மத்திய செயற்குழுதான் தீர்மானிக்கும்.

அது விரைவில் நடக்கும். மத்திய செயற்குழுவில் தலைவருக்கு எதிராகப் பேசக்கூடியவர்கள் இப்போது யாரும் இல்லை. எனவே அவர் வரவு-செலவு திட்ட விவாதம் நிறைவடைத்தவுடன் பாராளுமன்றம் செல்வார் என்றும் அந்த உறுப்பினர் குறிப்பிட்டார்.