தப்பிச் சென்று இரண்டு நாட்களாக தலைமறைவாகியிருந்த கொரோனா பெண் நேற்றிரவு கைது

அங்கொடை தொற்று நோயியல் வைத்தியசாலையிலிருந்து இரண்டு தினங்களுக்கு முன்னர் தப்பிச் சென்ற கொரோனா பெண்மணி நேற்றிரவு எஹெலியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தன்னுடைய இரண்டரை வயதுக் குழந்தையுடன் மருத்துவமனையின் ஜன்னலை உடைத்துக்கொண்டு தப்பிச் சென்ற குறிப்பிட்ட பெண்மணி பல குற்றங்களுடன் தொடர்புபட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தை பின்னர் அவர்களுடைய உறவினர்கள் வீட்டிலிருந்து பிடிபட்ட நிலையில் தாயார் தொடர்ந்தும் தலைமறைவாகியிருந்தார். பொலிஸார் தொடர்ச்சியான முன்னெடுத்த நடவடிக்கையையடுத்து நேற்றிரவு அவர் கைதானார்.