கலிபோர்னிய காட்டுத்தீயை பேரிடராக அறிவித்தார் ட்ரம்ப்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில காட்டுத்தீயை பேரிடர் நிலைமையாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

சுமார் 585 இடங்களில் பரவியுள்ள தீயை அணைக்கும் நடவடிக்கையில் 14,000 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை ஒரு மில்லியன் ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.

பலத்த காற்று காரணமாக தீ வேகமாக பரவி வருவதாக கூறப்படுகின்றது.

காட்டுத் தீயில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

மலைப்பாங்கான மற்றும் பலகை குடியிருப்புக்களை கொண்ட 3 இடங்களிலேயே பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தென் மற்றும் கிழக்கு சென் பிரான்சிஸ்கோவில் SCU Lightening Complex இல் ஏற்பட்ட தீயே​ கலிபோர்னிய வரலாற்றில் மூன்றாவது பாரிய தீப்பரவல் என மாநில ஆளுநர் Gavin Newsom தெரிவித்துள்ளார்.

சென் ஜோஸை அண்மித்த குடா பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனையவர்களை குடியிருப்புகளை விட்டு வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.