23 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது மிக ஆபத்தானது – எச்சரிக்கின்றது ஐக்கிய மக்கள் சக்தி

நவம்பர் 23ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது ஆபத்தானது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நேற்று நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண இதனை தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் ஆபத்து நிலவும் நிலையில் பாடசாலைகளை ஆரம்பிப்பது ஆபத்தானது எனத் தெரிவித்துள்ள அவர், பாடசாலைகளை 23ஆம் திகதி ஆரம்பிக்கும் முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

தற்போதைய சூழ்நிலையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது முன்னுரிமைக்குரிய விடயமா என கேள்வி எழுப்பிய அவர், பாடசாலைகளை ஆரம்பிப்பதன் மூலம் நிலைமை முன்னேற்றமடைகின்றது என அரசு சித்தரிக்க முயல்கின்றது எனவும் குறிப்பிட்டார்.