ஐ.டி.எச். மருத்துவமனையிலிருந்து இருவர் தப்பியோட்டம் – தேடுதல் வேட்டையில் பொலிஸார்

கொழும்பு அங்கொடை பகுதியிலுள்ள ஐடிஎச் மருத்துவமனையிலிருந்து கொரோனாவினால் பாதிக்கப்பட்ட இருவர் நேற்றிரவு தப்பிச் சென்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளியான பெண் ஒருவரும், அவரது மகனுமே இவ்வாறு நேற்றிரவு 9.30 மணியளவில் தப்பிச் சென்றதாக பொலிஸ் மற்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர்கள் இருவரும் எஹெலியகொடை பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களைக் கண்டுபிடிப்பதற்காக தேடுதல் நடவடிக்கை ஒன்றை பொலிஸார் ஆரம்பித்துள்ளர்கள்.