ஒழுங்கமைக்கப்பட்ட குழு ஒன்றே போலிச் செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்பியது – பொலிஸ் பேச்சாளர்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் வீதியில் இறந்து கிடப்பதாக அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்தியை, 31 பேர் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றே பரப்பியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சந்தேகநபர்கள், கடுகண்ணாவ, ஹந்தான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். புலனாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே, இதில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நான்கு பேரைத் தவிர, மேலும் 27 பேர் சம்பந்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.