148 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளி நாடு களில் சிக்கியுள்ள 148 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இன்று காலை ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 83 பேர் , அவுஸ்திரேலியாவிலிருந்து 52 பேர், ஜப்பானிலிருந்து 12 பேர் மற்றும் கட்டார் – தோஹாவிலிருந்து ஒருவர் ஆகி யோர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப் படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமானநிலையத்திலுள்ள செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.