கொரோனா தடுப்பு மருந்தை எங்கிருந்தாலும் கொண்டுவரத் தயார் – விமான நிறுவனங்கள் அறிவிப்பு

உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் கொரோனா தடுப்பூசி மருந்தை பிரான்ஸ் நாட்டுக்குக் கொண்டுவந்து சேர்க்கத் தயாராக இருப்பதாக பிரெஞ்சு மற்றும் நெதர்லாந்து நாடுகளின் கூட்டு நிறுவனங்களான Air France KLM என்பன அறிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்று கண்டுபிடிக்கப் பட்டால் உலகில் எந்த மூலையில் அவை இருந்தாலும் அவற்றை உடனடியாக எடுத்து வருவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக இரு நிறுவனங்களும் கூட்டாகக் கூறியுள்ளன.

தங்களிடம் உள்ள 150 பாரிய விமானங்கள் மூலம் இவற்றை தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு செல்ல தயாராக இருப்பதாகவும், இப்பொழுது Air France – KLM நீண்ட தூர விமான சேவைகளும் உள்ளூர் விமான சேவைகளும் மிகக் குறைந்தளவில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் இப்பொழுது தடுப்பூசி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டமை இந்த விமான நிறுவனங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.

பொதிகள் சுமக்கும் விமானம் சுமார் ஒரு மில்லியன் தடுப்பூசிகளை சுமந்து வரும் என்றும் பயணிகள் விமானம் 4 லட்சம் தடுப்பூசிகளை சுமந்து வரக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தடுப்பூசிகள் சந்தைப்படுத்தப்படும் பட்சத்தில் விமான நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் சேவைகளை தடுப்பூசிகளை ஏற்றிச் செல்வதற்கு மேற்கொள்ளும் என்று தெரியவருகிறது.