கொரோனா தடுப்பூசி விநியோகம் கிறிஸ்மஸுக்கு முன் தொடங்கும் – பயான்டெக் நிறுவனம் நம்பிக்கை

பைஸர் – பயான்டெக் கொரோனா தடுப்பூசி விநியோகம் கிறிஸ்துமசுக்கு முன்னதாக தொடங்கிவிடும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பைஸர், ஜேர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி, 3 ஆவது கட்ட சோதனையில், தீவிரமான பக்க விளைவுகள் ஏதுமின்றி 95 சதவீதம் பலனை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அவசர காலப் பயன்பாட்டிற்கு இந்த கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அவசரகால பயன்பாட்டிற்கும், ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை அடிப்படையிலும் டிசம்பரின் பிற்பாதியில் அங்கீகாரம் வழங்கக் கூடும் என்றும், திட்டமிட்டபடி அனைத்தும் நல்லபடியாக நடைபெற்றால் கிறிஸ்மஸுக்கு முன்னதாக விநியோகம் தொடங்கவாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டது.