இலங்கையில் மீண்டும் எந்த தீவிரவாதமும் தலைதூக்காத நிலையை ஏற்படுத்தியுள்ளோம் – கோத்தபாய ராஜபக்ஷ

இலங்கையில் மீண்டும் எந்த தீவிரவாதமும் தலைதூக்காத நிலையை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்

நாட்டு மக்களிற்கு ஆற்றிக்கொண்டிருக்கும் உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது

எனது அரசாங்கம் இலங்கையில் எந்தவிதமான தீவிரவாதமும் மீண்டும் தலைதூக்குவதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்துள்ளது

சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் கடத்துபவர்களும் பாதளஉலகத்தினரும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் இல்லை.

முன்னாள் இராணுவீரர்களிற்கு துரோகமிழைக்கும் நாட்டின் வளங்களை விற்க்கும் குறுகிய கால நலனிற்காக எந்த உடன்பாட்டிற்கும் வரதயாராகயிருக்கும், இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகளை தலையிட அனுமதிக்கும் யுகம் முடிவிற்கு வந்துள்ளது.

நாங்கள் அனைத்து நாடுகளுடனும் சிறந்த உறவுகளை கொண்டுள்ளோம், நாங்கள் மீண்டும் நாடுகளிற்கு இடையிலான மோதலில் சிக்குப்படாத இறைமையுள்ள நாடு என்பதை பெருமையுடன் உணர்த்தியுள்ளோம்.