மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு மலிவு விலையில் விமானப் பயணத்தை வழங்கியவர்

இந்தியர்கள் ஒரு ரூபாவில் அல்லது அதற்குக் குறைந்த செலவில் விமானப் பயணத்தை மேற்கொள்வதற்கான ஏற்பாட்டைத் தன்னால் செய்ய முடியும் என்ற அறிவித்தல் ஒன்றை ஒரு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஜீ.ஆர்.கோபிநாத் 2005 கோடை காலத்தில் வெளியிட்டார். இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் அப்போது அவர் ஒரு தொழிலதிபராகியிருக்கின்றார்.

இது இந்தியாவின் முதல் பட்ஜெட் விமான நிறுவனத்தை நிறுவியவரின் நம்பமுடியாத ஒரு அறிவித்தல்.

ஈஸிஜெட் மற்றும் ரியான் எயர் போன்ற ஐரோப்பிய பட்ஜெட் விமானங்களை முன்மாதிரியாகக் கொண்டு அப்போது இரு வருடங்களைப் பூர்த்தி செய்திருந்த அவரது விமான நிறுவனமான ஏர் டெக்கான், மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு விமானப் பயணத்துக்கான வாய்ப்பைக் கொடுத்திருந்தது. போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது கோபிநாத்தின் விமானப் பயணச் செலவு அதில் அரைவாசி மட்டும்தான்.

அப்போது அவரது விமான நிறுவனம் “மாற்றமடையும் விலை நிர்ணயம்” ஒன்றை அறிமுகப்படுத்தியது, அங்கு ஒரு சிறிய எண்ணிக்கையிலான “ஆரம்ப” வாடிக்கையாளர்கள் ஒரு ரூபாயில் பயணிக்க முடியும். பிந்தி வருபவர்கள் அதிகமான தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும். அதுகூட போட்டி நிறுவனங்களைவிடவும் மிகவும் குறைவானதாகவே இருக்கும்.

முன்பதிவு கவுண்டர்கள் வாடிக்கையாளர்களால் நிரம்பியிருக்கும். இது ஆச்சரியமானதல்ல. அவர்களில் பலர் முதல் முறையாக விமானப் பயண்தை மேற்கொள்பவர்களாக இருப்பார்கள். இத்தகைய விலை முறைகள் தொழில் துறையை சிதைக்கும் என்று விமர்சகர்கள் கூச்சலிட்டனர்.

கப்டன் கோபிநாத்தாக சூரியா

“ஒரு ரூபாய் டிக்கெட் மக்களின் கற்பனையை நீக்கியது, விரைவில் ஒரு முக்கிய வார்த்தையாக மாறியது” என்று கேப்டன் கோபிநாத் தனது நினைவுக் குறிப்பில் எழுதினார். தனது விமான நிறுவனம், “விலை தடையை மட்டுமல்ல, இந்தியாவின் சாதி மற்றும் வர்க்கத் தடையும் தகர்த்தது” என்று அவர் நம்பினார்.

அமேசான் பிரைம் வீடியோவில் இந்த வாரம் வெளியான புதிய தமிழ் திரைப்படமான “சூரரைப் பொற்று” தொழிலதிபரின் வாழ்க்கையை கொண்டாடுகிறது. கேப்டன் கோபிநாத்தின் நினைவுக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு, இப்படத்தை அகாடமி விருது வென்ற குணீத் மோங்கா தயாரித்திருக்கின்றார்.

“இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதாக இந்த நம்பமுடியாத கதை அமைந்திருக்கின்றது. கப்டன் கோபிநாத்தினால் குறைந்த செலவிலான விமானப் பயணம் என்ற கருத்து முன்வைக்கப்பட்ட போது பலரும் ஆச்சரியப்பட்டனர்” என மோங்கா பி.பி.சி.யிடம் தெரிவித்தார்.

பிரபல தமிழ்த் திரைப்பட நட்சத்திரம் சூரியா இத்திரைப்படத்தில் தொழிலதிபராக நடிக்கின்றார். “அவர் வர்க்க மற்றும் பொருளாதார தடைகளை உடைத்து இந்தியாவில் விமானப் பயணத்தில் புரட்சியைச் செய்தார்” என மோங்கா கூறுகின்றார்.

கோபிநாத்துக்கு உதவும் அவரது மனைவி

“சூரரைப் பொற்று திரைப்பட்மானது வணிக தமிழ் சினிமாவின் அனைத்து பிரபலமான அம்சங்களையும் கொண்டுள்ளது: பாடல் மற்றும் நடனம், சாதி மற்றும் வர்க்கத் தடைகளை உடைப்பதில் கவனம் செலுத்துதல், மற்றும் அதிக நடவடிக்கை மற்றும் பாடல்கள் போன்றன இந்தத் திரைப்படத்தை மெருகூட்டுகின்றது.

ஆனால் பிராந்திய இணைப்பை விரிவுபடுத்த உதவும் வகையில் கேப்டன் கோபிநாத் இந்தியாவில் 500 செயலற்ற விமான நிலையங்களையும் வான்வழிப் பாதைகளையும் எவ்வாறு கண்டுபிடித்தார் என்பதையும் இந்தப் படம் சொல்கிறது. அவரது மனைவி, பார்கவி, தனது சிறிய வியாபாரத்தில் இருந்து கிடைத்த பணத்தை கோபிநாத்துக்குப் பணம் தேவைப்படும் போது எவ்வாறு வழங்கினார் என்பதையும், இராணுவத்தைச் சேர்ந்த அவரது நண்பர்கள் அவரது கனவை நிறைவேற்றுவதில் அவருக்கு மிகப் பெரிய ஆதரவாளர்களாக எப்படி இருந்தார்கள் என்பதையும் இத்திரைப்படம் காட்டுகின்றது.

“சமமாக அணுகப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கப்டன் கோபிநாத் இருக்கின்றார் என்பதை இத்திரைப்படம் வெளிப்படுத்துகின்றது” எனக் கூறுகின்றார் சூரியா.

திரைப்படம் குறித்து வெளிவந்திருக்கும் விமர்சனங்கள் உற்சாகமளிப்பதாக இருக்கின்றது.

2003 இல் தமது முதலாவது விமான சேவைக்காக எயர் டெக்கான் பயன்படுத்திய 48 ஆசனங்களைக் கொண்ட விமானம்

கப்டன் கோபிநாத், தென் மாநிலமான கர்நாடகாவிலுள்ள ஒரு குக் கிராமத்தில் பிறந்தவர். தந்தை ஒரு ஆசிரியர் – விவசாயி. தாயார் ஒரு குடும்பப்பெண்.

கோபிநாத் இராணுவத்தில் இணைந்து 1971 ஆம் ஆண்டு பங்காளாதேஷ் விடுதலைக்கான போரில் ஈடுபட்டவர். 28 வயதில் ஓய்வுபெற்றார்.

தன்னுடைய சொந்த ஆர்வத்தினாலும், நண்பர்களின் உதவியினாலும், பல்வேறு வகையான தொழில் முயற்சிகளில் அவர் இறங்கினார். பட்டு வளர்ப்பு மற்றும் விருந்தோம்பல் என்பனவும் அதற்குள் அடங்கும்.

“என்னுடைய இளமைக்காலத்தில் அமைதியற்ற ஒருவனாகவே நான் இருந்தேன். அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி சொத்து சேர்க்க வேண்டும் என்பதில் வெறிபிடித்தவன்போல செயற்பட்டேன்” என கோபிநாத் பி.பி.சி.க்குத் தெரிவித்தார்.

“கனவுகாண்பது போதுமானதல்ல” என அவருக்குச் சொன்ன அவரது நண்பர், “கனவுகளை விற்பனை செய்ய வேண்டும்” எனவும் சொல்லியிருக்கின்றார்.

1997 ஆம் ஆண்டில் ஹெலிக்காப்டர் சேவை ஒன்றை இவர் ஆரம்பித்தார். இதுதான் இந்தியாவின் முதலாவது தனியார் ஹெலிக்காப்டர் நிறுவனமாகும். “வரைபடத்தில் ஒரு இடத்தை நீங்கள் குறிப்பிட்டுக் காட்டினால், உங்களை அந்த இடத்துக்கு நாங்கள் அழைத்துச்சென்று இறக்கி விடுவேம்” என்ற கோஷத்துடன் அதனை ஆரம்பித்ததாக அவர் நினைவுகூருகின்றார்.

2000 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் விடுமுறையைக் களித்துக்கொண்டிருந்த போதுதான் குறைந்த செலவிலான விமான சேவை ஒன்றை இந்தியாவில் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

பீனிக்ஸ் என்ற பகுதியில் உள்ளூர் விமான நிலையம், ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான பயணிகளை ஒரு நாளில் கையாள்வதை அவர் அவதானித்தார். அதனால், இந்தியாவிலுள்ள 40 விமான நிலையங்களையும் ஒருங்கணைத்தால் அதிகளவு விமானங்களையும், பயணிகளையும் கையாள முடியும் என அவர் கணக்குப் போட்டார்.

அமெரிக்காவில் 40,000 விமான சேவைகள் தினசரி இடம்பெறுவதை அவர் அவதானித்தார். அதேவேளையில், இந்தியாவில் 420 சேவைகள் மட்டுமே இடம்பெறுகின்றது. உடனடியாகவே அவர் கணக்குப் பார்த்தார். பஸ் மற்றும் ரயிலில் பயணம் செய்யும் 30 மில்லியன் இந்தியர்களில் சுமார் 5 வீதமானவர்கள் விமானப் பயணத்தை மேற்கொண்டால், வருடத்துக்கு 530 மில்லியன் விமானப் பயணிகளாக என்பது அவரது மதிப்பீடாக இருந்தது.

“இந்த எண்ணிக்கை பெரிதாகத் தென்பட்டாலும், இது 530 மில்லியன் மக்கள் பயணிப்பார்கள் என்பதைக் குறிப்பிடவில்லை. 200 மில்லியன் நடுத்தர வர்க்கத்தினர் வருடத்துக்கு இரண்டரைத் தடவைகள் பயணிப்பார்கள் என்பதைக் குறிப்பிடுகின்றது. இது அடுத்த 30 ஆண்டுகளில் கற்பனை செய்ய முடியாத வாய்ப்பு அல்ல” எனவும் அவர் விளக்குகின்றார்.

“இந்தியாவிலும் சாமானியர்களும் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தியாவுக்கு நான் திரும்பி வந்தேன்” என்று கேப்டன் கோபிநாத் கூறுகிறார்.

2003 ஆகஸ்ட்டில் 48 இருக்கைகள் கொண்ட ஆறு விமானங்களை அவர் நிறுவினார். தென்மாநில நகரங்களான ஹூப்ளி மற்றும் பெங்களூருக்கு இடையே ஒரு நாளைக்கு ஒரு விமானம் சேவையில் ஈடுபட்டது.

2007 இல் 67 விமான நிலையங்களுக்கு இடையில் 380 விமான சேவைகளை அவர் நடத்தினார். இவற்றில் பெரும்பாலானவை சிறிய நகரங்களாகும். அவரிடமிருந்த விமானங்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்தது. விமான சேவை ஆரம்பிக்கப்பட்ட போது 2,000 பயணிகள் பயணித்த நிலையில் தற்போது 25,000 பயணிகள் இந்த பட்ஜெட் விமானங்களில் தினசரி பயணிக்கின்றார்கள். மூன்று மில்லியன் இந்தியர்கள் ஒரு ரூபா டிக்கெட்டில் பயணித்துள்ளனர்.

ஆனால் ஏர் டெக்கான் இழப்புகளை அதிகரிப்பதால் செலவுகளை சமாளிக்க போராடியது. 2007 இல் கப்டன் கோபிநாத் தன்னுடைய நிறுவனத்தை கிங்பிஷர் நிறுவனத்துக்கு விற்பனை செய்தார். கிங்பிஷர் விமான சேவையையும் நடத்திவந்த விஜய் மல்லையாதான் அந்த நிறுவனத்தின் தலைவர். Kingfisher Red தமது புதிய விமான சேவைக்கு விஜய் மல்லையா மறுபெயரிட்டார்.

அதற்குள் வேறு குறைந்த கட்டண விமான சேவைகளும் சந்தையில் நுழைந்து இன்னும் ஆதிக்கம் செலுத்துகின்றன. 2018 ஆம் ஆண்டில், சுமார் 140 மில்லியன் இந்தியர்கள் உள்நாட்டில் விமானப் பயணங்களை மேற்கொண்டனர். பெரும்பாலும் பட்ஜெட் விமானங்களில் அவர்கள் பயணித்தார்கள்.

ஆனால் ஏர் டெக்கான் இப்போது சேவையில் இல்லை. செப்டம்பர் 2011 இல், மல்லையா கிங்பிஷர் ரெட் மற்றும் இறுதியில் அவரது முழு வணிகத்தையும் மூடிவிட்டார். அது வங்குரோந்த நிலைக்குச் சென்றது.

“விமான நிறுவனத்திற்கு ஒருபோதும் மல்லையா நேரத்தைச் செலவிடவில்லை” என்று கேப்டன் கோபிநாத் பிபிசியிடம் கூறினார். “அவர் அதில் கவனம் செலுத்தியிருந்தால் – அவரை விட சிறந்த வேலையை யாரும் செய்திருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை” என்றும் அவர் சொல்கின்றார்.

“இது கவலையான ஒன்று. ஆனால் ஏர் டெக்கனின் கனவு வாழ்கிறது. [பட்ஜெட் விமான நிறுவனம்] புரட்சி தொடர்கிறது” என்று கேப்டன் கோபிநாத் கூறுகிறார்.