கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஆராய நால்வர் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை இணையவழியூடாக இடம்பெற்றது. இதன் போதே அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைக் கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் –

அரசு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கியுள்ளதாகத் தவறான செய்திகள் வெளியிடப்படுகின்றன. துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஆராயநால்வர் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு முனையம் அபிவிருத்தி, வரவு – செலவு, அபிவிருத்திக்காக பிற நிறுவனங்களுக்கு வழங்குவதா அல்லதுஉள்ளூர் மட்டத்தில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பது தொடர்பாகக் ஆராயக் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது” என்றார்.