கொழும்பில் கொரோனா வைரஸ் சமூகத் தொற்றாக மாறியுள்ளதா? அரச மருத்துவ சங்கம் கேள்வி

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் சமூகத் தொற்றாக மாறியுள்ளதா என்பது தொடர்பாக சுகாதார அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் கடந்த சில வாரங்களாகக் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் ஹரித அலுத்கே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு மாநகர சபை எல்லைப் பகுதியிலும் மேல் மாகாணத்திலும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் தொடர்ந்தும் நிலவுவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த தடுப்பு பிரிவின் பிரதானி வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.