ஸ்தம்பிக்கும் நிலையில் துறைமுகப் பணி – அத்தியவசியச் சேவையாக ஜனாதிபதியால் பிரகடனம்

துறைமுக அதிகார சபையின் பணிகளை அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்திய விசேட வர்த்த மானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்டிப இலங்கைத் துறைமுக அதிகார சபையினால் அதற்கமைவாக மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்தவொரு தன்மையிலான சேவையின் சகல சேவைகள், வேலைகள் மற்றும் தொழில் பங்களிப்பு அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக ஊழியர்கள் பலர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், துறைமுகப் பணிகள் பெருமளக்குப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை தோன்றியுள்ளது. இதனையடுத்தே துறைமுகப் பணி அத்தியவசியச் சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.