பிரதமர் மஹிந்த சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம் – முக்கிய அம்சங்கள் இவைதான்

நாட்டு மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் தீர்வு வழங்கப்படும் எனத் தெரிவித்து 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

சுதந்திர இலங்கையின் 75 ஆவது வரவு – செலவுத் திட்டம், கடந்த ஒக்ரோபர் மாதம் 6 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன் அதனை கடந்த மாதம் 20 ஆம் திகதி பிரதமர் பாராளுமன்றில் முன்வைத்தார்.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நான்கு நாள்களுக்கு இடம்பெறவுள்ளது. அதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. மேலும் வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் டிசெம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

வரவு – செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. இம்முறை வரவு – செலவுத் திட்டம் மீதான விவாத நாள்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனப் பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.

2021 ஆம் நிதியாண்டுக்கான அரச செலவீனம் 2.678 பில்லியன் ரூபாவாகும் மேலும் இலங்கைக்குள் அல்லது அதற்கு வெளியே 2,900 பில்லியன் ரூபா வரையறைக்கு உட்பட்டு கடன்களைப் பெறவும் வரவு- செலவுத் திட்ட சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும் வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் டிசெம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. வரவு- செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இன்று 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வுகள் காலை 9.30 முதல் மாலை 5.30 வரை இடம்பெறவுள்ளது. மேலும் வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் டிசெம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

வரவு- செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வரவு – செலவுத் திட்டம் இதுவாகும்.

பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நேற்றுப் பிற்பகல் 1.45 மணிக்கு வரவு – செலவுத் திட்டத்தை வாசிக்க ஆரம்பித்து மாலை 4.50 மணியளவில் நிதியமைச்சர் மஹிந்த நிறைவுக்குக் கொண்டுவந்தார். 3 உறுப்பினர்கள் வரவில்லை பிரதமரால் வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பித்து வாசிப்பதற்கு முன்னரே ஆளும் – எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களின் ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர்.

இருப்பினும் நீதிமன்ற உத்தரவில் சிறைச்சாலைகளில் இருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர ஆகியோர் சிறைச்சாலைகளில் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் அவர்களைப் பாராளுமன்றத்துக்கு அழைத்துவரவில்லை.

தேநீர் இடைவேளைக்குப் பின்னர் சுமார் அரை மணிநேரம் வரை அறிக்கை வாசித்துக்கொண்டிருக்கையில் ஏற்பட்ட களைப்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் சிறிது நேரம் கேட்டு நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ ஆசனத்தில் அமர்ந்தார். பின்னர் ஆசனத்தில் அமர்ந்தவாறு வாசிக்குமாறு தெரிவித்ததும் வரவு – செலவுத் திட்ட அறிக்கையை சமர்ப்பித்து முடிவதற்கு சுமார் 5 நிமிடங்கள் இருக்கும்போது மீண்டும் எழுந்து நின்று வாசித்து 4.50 மணியளவில் முழுமையாகச் சமர்ப்பித்தார்.

இரண்டரை மணி நேரம்வரை நீடித்த வரவு – செலவு திட்ட உரை அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தை பிரதமர் பிற்பகல் 1.45 மணிக்கு சமர்ப்பித்து வாசிக்க ஆரம்பித்து பிற்பகல் 4.50மணிக்கு முடித்துக் கொண்டார். இதற்கிடையில் அரை மணி நேரம் தேநீர் இடைவேளை வழங்கப்பட்டது.

அதன் பிரகாரம் சுமார் 2 அரை மணி நேரத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான முழு வரவு – செலவுத் திட்டத்தையும் பிரதமர் சமர்ப்பித்தார். இறுதியாக சபாநாயகர் சபையை வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்துக்காக இன்று காலை 9.30 மணிவரை ஒத்திவைத்தார்.