கட்சியிலிருந்து நீக்கப்படுகின்றார் டயானா – சட்டபூர்வமான அறிவித்தலை அனுப்பினார் சஜித்

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த டயானா கமகேவை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அது தொடர்பான விளக்கக் கடிதத்தை டயானாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த டயானாவை பாராளுமன்றக் குழுவில் இருந்து நீக்குவதற்கு ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிலையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கையாகக் கட்சி உறுப்புரிமையில் இருந்து அவர் நீக்கப்படவுள்ளார். இதற்கான சட்டபூர்வமான அறிவித்தலே சஜித்தால் அனுப்பட்டுள்ளது.