புதிய அரசியலமைப்பிற்கான மாற்று முன்மொழிவுகள் பிரதமரிடம் கையளிப்பு

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பிற்காக முன்வைக்கப்பட்ட மாற்று முன்மொழிவுகள் உள்ளடங்கிய நூல் நேற்று பௌத்த மகா சம்மேளனத் தலைவர் ஜகத் சுமதிபால அவர்களினால் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் வழங்கப்பட்டது.

பௌத்த சாசன செயலணி மற்றும் அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி மதிப்பிற்குரிய மஹா சங்கத்தினரால் விஜேராமவிலுள்ள கௌரவ பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து இந்நூல் கௌரவ பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தின், தேசிய கொள்கை திட்டமிடல் குழு, சட்டம், அரச நிர்வாகம், தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச கொள்கை துணைக் குழுவினால் இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

வணக்கத்திற்குரிய வஜிராராமாவாசி ஞானசீஹ தேரர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி பாலித பிரனாந்து, ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன லால் டி அல்விஸ், ஜனாதிபதி சட்டத்தரணி வைத்யரத்ன, கலாநிதி பாலித கோஹொன, பேராசிரியர் லலிதசிறி குணருவண், ரஞ்சித் தென்னகோன், கலாநிதி நிமல் ஹெட்டிஆராச்சி, ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் சந்திர நிமல் வாகிஷ்ட ஆகியோரை இத்துணைக் குழு கொண்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் பௌத்தசாசன செயலணியின் தலைவர், ஆனந்த மகா வித்தியாலயத்தின் ஓய்வுபெற்ற உதவி அதிபர், கலாநிதி திவியாகத யசஸ்தி தேரர், அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம், தேசிய கொள்கை திட்டமிடல் குழு,சட்டம், அரச நிர்வாகம் தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச கொள்கை துணைக்குழுவின் தலைவர் வணக்கத்திற்குரிய வணக்கத்திற்குரிய விஜேராராமவாசி ஞானசீஹ தேரர், பௌத்த சம்மேளனத்தின் தலைவர் திரு.ஜகத் சுமதிபால, பிரதி தலைவர் ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் சந்திர நிமல் வாகிஷ்ட ஆகியோர் கலந்து கொண்டனர்.