கொரோனா தடுப்பு மருந்து ; சந்தைக்கு வரும் முன்னரே முன்னணி நாடுகள் ஒப்பந்தம்

கொரோனா தடுப்பு மருந்துகள் விரைவில் சந்தைக்கு வரவுள்ளன. இந்நிலையில் இந்த மருந்துகளை வாங்குவதற்கு முன்னணி நாடுகள் பல ஒப்பந்தம் செய்துள்ளன.

உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன.

இதில், ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ என்ற தடுப்பு மருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ளது. ஏனைய, முன்னணி நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்துகள் விரைவில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மருந்துகளின் மொத்த உற்பத்தியில் பெரும் பாலான மருந்துகளை பெறுவதற்கான ஒப்பந்தங்களை வளர்ந்தநாடுகள் பெற்றுவிட்டன.

இதன்படி, அஸ்ட்ரா ஜெனேகா மருந்தின் 240 கோடி டோஸ்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. இதேபோல, நோவா வேக்ஸ் மருந்தின் 130 கோடி டோஸ்களையும் சனோபி ஜி.எஸ்.கே. மருந்தின் 73.2 கோடி டேஸ்களும், பைசர், பயோ டெக் மருந்தின் 52.6 கோடி டோஸ்களும் வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.