ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு 18 ஆம் திகதி விசேட உரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை மறுதினம் 18ஆம் திகதி புதன்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் இவ் விசேட உரை, புதன் கிழமை இரவு 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 18 ஆம் திகதியுடன் கோட்டாபய ராஜபக்ஷ, தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.