‘ட்ரோன் படையணி’ உதவியுடன் இதுவரை 22 பேர் கைது – இராணுவ தளபதி தகவல்

இலங்கை இராணுவத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ட்ரோன் படையணி இதுவரை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 22 பேரைக் கைது செய்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் அதிக ஆபத்து நிலவும் பகுதிகளான கொழும்பு வடக்கு, கம்பஹா பிரதேச மக்களின் நகர்வைக் கண்காணிக்க ட்ரோன் கமெராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நவம்பர் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ட்ரோன் படையணியின் உதவியுடன் நாட்டைப் பாதுகாக்க முடியும் என இராணுவம் நம்புவதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.