கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை கடைப்பிடியுங்கள் – நாமல் கோரிக்கை

சுகாதார அதிகாரிகளின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று கண்டியில் ஊடகங்களுடன் பேசிய அமைச்சர் நாமல் ராஜபக்ஷ,சுகாதார பிரச்னைகள் தொடர்பான விடயங்களில் அரசியல் ஈடுபாடு தேவையற்றது. எனவே அனைத்து பிரிவுகளும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்-என்றார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் தகனம் செய்வது தொடர்பான சர்ச்சைக்குரிய பிரச்சினை தொடர்பாக ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது, பொது மக்கள் தொடர்பான விடயங்களை கவனமாக பரிசீலித்து தீர்க்கவேண்டும்.இருப்பினும் இது போன்ற தீர்வுகள் சுகாதார நிபுணர்களால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களிலிருந்து விலக முடியாது என்று குறிப்பிட்டார்.