சுகாதார அமைச்சின் ஊட கப்பேச்சாளர் பதவியில் இருந்து வைத்தியர் ஜயருவன் பண்டார நீக்கம்

சுகாதார அமைச்சின் ஊட கப்பேச்சாளர் பதவியில் இருந்து வைத்தியர் ஜயருவன் பண்டார நீக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி விடுத்த பணிப்புரையின் பிரகாரமே அவரிடமிருந்து அந்தப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளராக பணியாற்றிய ஜயருவன் பண்டார அந்தப் பதவியில் இருந் தும் அண்மையில் நீக்கப்பட் டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தற்போது மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றி வருகின்றார். கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான தகவல்களை மிகவும் சிறப்பாக வெளியிட்டு, மக்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கிப் பெரும் வரவேற்பை ஜயருவன் பண்டார பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.