பஸில் ராஜபக்‌ஷ பாராளுமன்றம் வரவேண்டும் – ஆளுங் கட்சி எம்.பி.க்கள் தயாரிக்கும் மனு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுனர் பஸில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்து ஆளுங்கட்சி எம்.பிக்கள் அவரிடம் மனுவொன்றை கையளிக்கவுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுனர் பஸில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்து ஆளுங்கட்சி எம்.பிக்கள் அவரிடம் மனுவொன்றை கையளிக்கவுள்ளனர்.

அந்த மனுவில் நேற்று முன்தினம் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட நிலையில் ஏனையோரும் கையொப்பம் இடுவர் எனத் தெரியவருகின்றது. பாராளுமன்றம் வருவதற்கு பஸில் ராஜபக்ஷ ஏற்கனவே திட்டமிட்டுள்ளார். இதற்காக ஜயந்த கெட்டகொட எம்.பி., தனது பதவியைத் துறப்பதற்கும் தயார் நிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே ஆளுங்கட்சி எம்.பிக்கள் தாமாக அழைக்கும் விதத்தில் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர் பஸில் ராஜபக்ஷவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியொன்று வழங்கப்படவுள்ளது