மேல் மாகாண பயணத் தடை நீடிக்கும் சாத்தியம் இல்லை – இராணுவத் தளபதி சொல்கின்றார்

மேல்மாகாணத்தில் நடைமுறையில் உள்ள பயணத்தடையை நீடிக்கும் எண்ணம் இல்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு 15 ஆம் திகதி நள்ளிரவுவரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. அக்காலப்பகுதி முடிவடைந்த பின்னரும் தடையை நீடிக்கும் திட்டம் இல்லை. எனினும், அடுத்த 48 மணிநேரத்தில் வரும் முடிவுகளின் அடிப்படையிலேயே தீர்மானம் எடுக்கப்படும்.

தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இல்லாத பகுதிகளை விடுவிப்பது தொடர்பில் இன்று கலந் துரையாடப்படவுள்ளது” என்றார் இராணுவத் தளபதி.