தனிமைப்படுத்தப்பட்டது தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமம் – அன்னதானத்தையடுத்து நடவடிக்கை

தொண்டைமனாறு செல்வச் சந்நிதியில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சுகாதார அமைச்சினால் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நேற்று அன்னதானம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்து, வல்வெட்டித்துறை பொதுச் சுகாதார பரிசோதகரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆச்சிரமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆச்சிரமத்தில் 5 பேர் மட்டும் தங்கியுள்ள நிலையில் அவர்கள் வெளியில் வருவதற்கோ வெளியிலிருந்து யாராவது உள்ளே செல்வதற்கோ தடைவிதிக்கப்பட்டுள்ளது.