5 கொரோனா மரணங்கள் நேற்று பதிவு – பலியானோர் தொகை 53 ஆக உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் ஐந்து பேர் மரணமடைந்திருப்பதாக நேற்று பதிவாகியுள்ளது. இதன் மூலம் கொரோனாவினால் மரணடைந்தவர்கள் தொகை 53 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மரணமடைந்தவர்களின் விபரங்கள்;

கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 83 வயதான பெண் ஒருவர் தனது ட்டிலேயே உயிரிழந்துள்ளார். உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் கொரோனா தொற்று ஆகியன இவரது மரணத்துக்கான காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.கொரோனா தொற்று காரணமாக உயர் இரத்த அழுத்தம் அதிகரித்தமை மற்றும் மூளைக்கான இரத்த ஓட்டம் தடைப்பட்டமை ஆகியன இவரது மரணத்துக்கான காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் கொரோனா தொற்று ஆகியன இவரது மரணத்துக்கான காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டமை மற்றும் மாரடைப்பு ஆகியன இவரது மரணத்துக்கான காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த மற்றுமொரு 64 வயதான ஆண் ஒருவர் தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டமை மற்றும் இளைப்பு ஆகியன இவரது மரணத்துக்கான காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.