நேற்றும் இருவர் கொரோனாவினால் மரணம் – 300 பேருக்கு தொற்று பரவியது

நாட்டில் கொரோனா தொற்றினால் நேற்றும் இருவர் உயிரிழந்தனர். மேலும் 300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 135ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 617ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து நேற்று 500 பேர்வீடுகளுக்குத் திரும்பிய நிலையில் இதுவரை 10 ஆயிரத்து 600 இற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

5 ஆயிரம் பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை நாட்டில் நேற்று இருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனாவால் மரணித்தோர் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.