வெளிநாட்டு கடன்களை செலுத்தியுள்ளது அரசு – சபையில் கூறினார் மஹிந்த

2020ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டுக் கடன்களை இலங்கை அரசாங்கம் செலுத்திவிட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டவரைவை நேற்று பாராளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“இலங்கை கடும் கடன் நெருக்கடியில் உள்ளது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்க் கட்சியினர் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். எனினும் தற்போதைய நிர்வாகம் கடன் விவகாரத்தை சிறப்பாக கையாண்டுள்ளது.

2020 முதல் இலங்கை 4200 அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கடனாகச் செலுத்தவேண்டியிருந்தது. எனினும் 2020 இற்கான கடன்களை செலுத்திவிட்டோம்.

வலுவான பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாகவே இதனைச் செய்ய முடிந்தது. அரசு தேவையற்ற இறக்குமதிகளுக்கு தடை விதித்துள்ளது. தேவையற்ற வெளிநாட்டுக் கடன்களை இடைநிறுத்தவும் தீர்மானித்தது” என்றார்.