சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி மீது வருகிறது நம்பிக்கையில்லா பிரேரணை – எதிரணி தீர்மானம்

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகின்றது.

இந்தப் பிரேரணையில் சில எம்.பிக்கள் நேற்று கையொப்பமிட்ட நிலையில் ஏனையோர் இன்று கையொப்பமிடுவார்கள் எனவும் தெரிய வருகின்றது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமை, மக்கள் மத்தியில் தவறான தகவல்களை வெளியிட்டமை உட்பட மேலும் சில குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.