எனது வெற்றியைத் தடுப்பதற்கோ கொரோனா தடுப்பூசி தாமதம் – குற்றஞ்சாட்டுகின்றார் ட்ரம்ப்

“கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பால் நான் வெற்றி பெறுவதை விரும்பவில்லை. இதனாலேயே அமெரிக்க உணவு, மருந்து கட்டுப்பாடு அமைப்பு வேண்டுமென்றே தடுப்பூசியை தாமதப்படுத்தியது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.

கொரோனா தடுப்பூசி பைசல் 90 வீதம் செயல்திறன் மிக்கது என்று பைசர் நிறுவனம் நேற்றுமுன்தினம் அறிவித்தது. இந்நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அமெரிக்க உணவு, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் பதவிகளில் இருப்பவர்கள் ஜனாதிபதி ட்ரம்பாலேயே நியமிக்கப்பட்டனர். ஆனாலும், அவர்கள் தனது பிரசாரத்தைக் குழப்பும் விதமாக செயல்பட்டனர் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.