ரிஷாத் பதியூதீன் மீதான விளக்கமறியல் 13 ஆம் திகதி வரை நீடிப்பு

அரச நிதியை முறைகேடாகச் செலவிட்டமை மற்றும் தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்ரோபர் 19 ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவரை நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே எதிர்வரும் 13 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு தினத்தில், புத்தளம் பகுதியிலுள்ள இடம் பெயர்ந்த மக்களை, அரச பஸ்கள் ஊடாக மன்னார் பகுதிக்கு அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டே அவர் கைது செய்யப்பட்டார்.