கொரோனா 2ஆம் அலை அரசுக்கே தெளிவில்லை – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் இரண்டாம் அலை குறித்து அரசிடம் ஒருமித்த நிலைப்பாடு காணப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

சுகாதார தரப்பும், சுகாதார அமைச்சரும் மாறுப்பட்ட கருத்துக்களையே தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டு தற்போது ஒருமாத காலம் நிறைவடைந்துள்ளநிலையில், ஒவ்வாரு நாளும் எவ்வாறு சமாளிப்பது என்பதை அடிப்படையாகக் கொண்டு சுகாதார அமைச்சரினால் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

வைத்தியத்துறை சார்ந்த அதிகாரிகளின் அனைத்து கருத்துக்களும் சுகாதார அமைச்சரின் கருத்துக்கு முரணானதாகவே காணப்படுகின்றன” என்றார்.