பிரிந்தானிய இராணுவத்தில் 30 ஆயிரம் எந்திர மனிதர்கள் – களமிறக்க தளபதி திட்டம்

2030 ஆம் ஆண்டு இங்கிலாந்து இராணுவத்தில் 30,000 எந்திர மனிதர்களை களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்து ஆயுதப் படைகளின் தலைவர் ஜெனரல் நிக்கார்டர் தெரிவித்துள்ளார்.

சவாலான சூழலை எதிர்கொள்ள இராணுவத்தை நவீன மயப்படுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். நேற்றுமுன்தினம் ஸ்கை நியூஸுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்த அவர், போர்க்களங்களில் முன்னரங்குகளில் இந்த இராணுவ எந்திர மனிதர்கள் களமிறக்கப்படுவர் என்றும் கூறினார்.

2030-இல் எங்கள் இராணுவத்தில் சுமார் 30,000 எந்திர மனிதர்கள் இருக்கலாம் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கம் போராடி வருகிறது.

இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்த இடைவெளியை நிரப்ப எந்திர மனிதர்களைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளோம். ஆனால், மனிதர்கள் மட்டுமே ஆயுதங்களைக் கையாள வேண்டும் என்பதே பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சின் கொள்கையாக உள்ள நிலையில் இது குறித்து ஆராயப்படும் என்றும் நிக் கார்டர் கூறினார்.