
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வாழ்த்துத் தெரிவிக்க சீனா மறுத்து விட்டது.
கடந்த 3ஆம் திகதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோபைடன் வெற்றி பெற்றுள்ளார்.
அவருக்கு உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளின் தலைவர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செய்தித்தொடர்பாளர் வோங் வென்பின் கூறுகையில்:
“இந்த முடிவு இன்னும் முடிவு செய்யப்பட வேண்டும். அமெரிக்கத் தேர்தலின் தலைவிதி அதன் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளால் தீர்மானிக்கப்படும. சீனாவின் நிலைப்பாடு நிலையானது மற்றும் தெளிவானது.
நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கான எங்கள் தீர்மானம் அசைக்க முடியாதது” என்றார்.