சீன ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் வார இறுதியில் ‘சூம்’ உரையாடலொன்றை மேற்கொண்டார் என வெளியாகியுள்ள தகவல்களை சீனா நிராகரித்துள்ளது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இலங்கை ஜனாதிபதியுடன் நேற்றுமுன்தினம் பேச்சுக்களை மேற்கொண்டார் என அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நிர்வாகத்தைக் கையாளும் விடயம் தொடர்பில் தங்கள் அனுபவங்களை இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டார்கள் என அந்த அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
எனினும் சீனத் தூதரகம் இதனை நிராகரித்துள்ளது. சீனாவினதும் இலங்கையினதும் தலைவர்கள் எப்போதும் நெருக்கமான தொடர்புகளைப்பேணி வருகின்றனர் என தெரிவித்துள்ள சீனத் தூதரகம் எதிர்வரும் நாட்களில் மேலும் பல தொடர்பாடல்களை எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ளது.
எனினும் இரு தலைவர்களும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்து முன்னெடுத்த செயலமர்வில் இருவரும் இணைந்து கொள்ளவில்லை என சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.