தொற்றிருப்பதை அறியாமலே சமூகத்தில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும் – கரு ஜயசூரிய வலியுறுத்து

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதை அறியாமலேயே சமூகத்தில் இருப்பவர்களை விரைவாக இனங்காண வேண்டிய தேவையுள்ளது என முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவரின் ருவிட் டர்பதிவு:

“தமக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை அறியாமலேயே துரதிஷ்டவசமாக சிலர் உயிரிழந்திருக்கின்றனர். இவ்வாறு வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதை விரைவாக இனங்கண்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட வேண்டிய பலர் சமூகத்தில் இருப்பதற்கான வாய்ப்புள்ளது.

தாம் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதை அறியாத ஒருவர் அதை ஏனையவர்களுக்குப் பரப்புவதிலிருந்து எவ்வாறு விலகியிருக்க முடியும். அதேபோன்று மரக்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருள்களை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதில் அனர்த்த முகாமைத்துவ அடிப்படையிலான முறையான செயல்திட்டமொன்றை அரசாங்கம் பின்பற்றுவதுஅவசியம்.”