தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள டிரம்ப் தயாரில்லை – சிஎன்என்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வியடைந்துள்ளதை டொனால்ட் டிரம்ப் ஏற்றுக்கொள்ளமாட்டார் ஒப்புக்கொள்ளமாட்டார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

டிரம்ப் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு தேர்தலில் தோற்றதை ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்காதீர்கள் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவர் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டேன் என திணறுகின்றார் தனக்கு சாதகமாக ஏதாவது கிடைக்காதா என தேடுகின்றார் என அவரின் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்

அவர் யதார்த்தத்தை ஒருபோதும் ஏற்கமாட்டார் என அவரின் ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.