
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுவிட்டார் என அமெரிக்க ஊடகங்கள் நேற்று இரவு செய்தி வெளியிட்டுள்ளன. உத்தியோகபூர்வ முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத போதும், அசோசியேட்டட் பிரஸ், சிஎன்என் ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டன.
பென்சில்வேனியாவில் பிடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஆட்சியமைக்க தேவையான 270 தேர்தல் சபைக்கும் அதிக எண்ணிக்கையை அவர் பெற்றுள்ளார். தற்போதுவரை அவர் 284 தேர்தல் சபையை கைப்பற்றியுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.
எனினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனடியாக இதை நிராகரித்துள்ளார். இந்த முடிவை நீதிமன்றத்தில் சவால் செய்யவுள்ளதாக அவரது பிரசாரக் குழு அறிவித்துள்ளது. குறிப்பாக ஜோர்ஜியா, பென்சில்வேனியா, அரிசோனா மற்றும் மிச்சிகன் மாநிலங்களில் மறுவாக்கு எண்ணிக்கையை கோரவுள்ளனர விஸ்கான்சினில் மறுபரிசீலனை செய்வதற்கான திட்டங்களை அறிவித்ததுடன், பல மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வழக்கு களைத் தாக்கல் செய்துள்ளனர். ஜோர்ஜியாவும் வாக்குகளை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளது.