எங்கள் முன்னால் அதிகளவான பணிகள் உள்ளன நாங்கள் அவற்றை ஆரம்பிப்போம் – கமலா ஹாரிஸ் செய்தி

அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த தேர்தல் ஜோ பைடனை பற்றியதோ அல்லது என்னை பற்றியதோயில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இது அமெரிக்காவின் ஆன்மாகுறித்தது,அதற்காக நாங்கள் போராட தயராகயிருக்கின்றோம் என்பது குறித்தது என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

எங்கள் முன்னால் அதிகளவான பணிகள் உள்ளன நாங்கள் அவற்றை ஆரம்பிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.