நியூஸிலாந்தின் பிரதமராக பதவியேற்றார் ஜெசிந்தா

நியூஸிலாந்து பிரதமராக இரண்டாவது முறையாக ஜெசிந்தா ஆர்டெர்ன் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

நியூஸிலாந்தில் கடந்த ஒக்ரோபர் 17 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில், ஜெசிந்தா ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சி, மொத்தம் உள்ள 120 இடங்களில் 65 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

இதனையடுத்து வெலிங்டனில் நேற்று நடைபெற்ற விழாவில், நாட்டின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெசிந்தா ஆர் டெர்ன் பதவியேற்றார்.