இலங்கையில் கொரோனா தொற்றாளர் தொகை 12,500 ஐ தாண்டியது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை நேற்றுக்காலை 09 மணியளவில் 12 ஆயிரத்து 570 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திவுலபிட்டி – பேலியகொடை கொத்தணியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தக் கொத்தணியில் நேற்றுமுன்தினம் மேலும் 383 பேர் கொரோனா தொற்றாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்.இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 12 ஆயிரம் 570 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, திவுல பிட்டி – பேலியகொடை கொத்தணி தொற்றாளர்கள் எண்ணிக்கை 9092 ஆக உயர்ந்துள்ளது என தொற்றுநோயில்பிரிவு தெரிவித் துள்ளது.

தற்போது மருத்துவமனைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 5ஆயிரத்து 918 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 765 பேர் நேற்றுமுன்தினம் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை கொரோனாதொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று சந்தேகத்தில் 429 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், நேற்று முன்தினம் பதிவாகிய 5 மரணங்களுடன் கொரோனா தொற்றால் 30 பேர் இதுவரை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.